யுனிசெஃப் அமைப்பானது 2024 ஆம் ஆண்டு உலகக் குழந்தைகளின் நிலை (SOWC-2024) அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மக்கள்தொகை மாற்றங்கள், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் மாற்றமிக்கத் தொழில்நுட்பங்கள் போன்ற மூன்று மிகவும் நீண்ட கால உலகளாவிய ஆற்றல்களின் தாக்கத்தை இந்த அறிக்கை ஆராய்கிறது.
2022 ஆம் ஆண்டு முதல், மிக தீவிர வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதனால் உலகம் முழுவதும் 400 மில்லியன் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
2050 ஆம் ஆண்டுகளில், உலகளாவியக் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 2.3 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டிற்குள் உலகின் குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா, சீனா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பங்கானது மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் குழந்தைகளின் எண்ணிக்கையில் 106 மில்லியன் அளவிற்குச் சரிவு இருந்தாலும், இந்தியாவில் தோராயமாக 350 மில்லியன் குழந்தைகள் இருப்பர்.
2050 ஆம் ஆண்டுகளில் உலகளவில் சுமார் 60 சதவீத குழந்தைகள் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2000 ஆம் ஆண்டுகளில் 44 சதவீதமாக இருந்தது.
உலகளவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதம் ஆனது 2000 ஆம் ஆண்டுகளில் இருந்த 98 சதவீதத்தினை விட சுமார் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒரு குழந்தை 5 வயது வரையில் உயிர் வாழ்வதற்கான நிகழ்தகவு ஆனது 2000 ஆம் ஆண்டில் பதிவான 99.5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
2000 ஆம் ஆண்டுகளில் பிறந்த பெண் குழந்தைகளின் ஆயுட்காலம் சுமார் 70 ஆகவும், ஆண்களுக்கு சுமார் 66 ஆகவும் இருந்த நிலையில் இது தற்போது முறையே 81 மற்றும் 76 ஆகவும் அதிகரித்துள்ளது.
2050 ஆம் ஆண்டுகளில், 2000 ஆம் ஆண்டுகளில் இருந்த அளவை விட, மிகவும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மிக தீவிரப் பருவநிலை அபாயங்களுக்கு ஆளாக நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதிக வருமானம் உள்ள நாடுகளில் சுமார் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் இணைய வசதியினைப் பெற்றிருந்தன நிலையில் இது குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் 26 சதவிகிதமாக உள்ளது.