TNPSC Thervupettagam

உலகக் கோப்பை சதுரங்க இறுதிப் போட்டி

August 28 , 2023 453 days 337 0
  • இந்தியாவின் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சதுரங்க உலகக் கோப்பையினை வென்றுள்ளார்.
  • பிரக்ஞானந்தா கஜகஸ்தானில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு FIDE உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
  • ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் கோப்பையினை வென்ற கார்ல்சன் வென்ற முதல் உலகக் கோப்பை இதுவாகும்.
  • பிரக்ஞானந்தா, தற்போது பாபி பிஷ்ஷர் மற்றும் கார்ல்ன் ஆகியோருக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளம் வீரர் என்ற ஒரு பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • பிரக்ஞானந்தா 2016 ஆம் ஆண்டில் தனது 10 வயதில் சதுரங்கப் போட்டியின் வரலாற்றில் இளம் சர்வதேச மாஸ்டர் ஆனார்.
  • இவர் தனது ஏழு வயதிலேயே சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் மாஸ்டர் என்ற ஒரு பட்டத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்