குஜராத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தித் தமது ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பையினை வென்றது.
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைவதற்கு முன்பு, இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆஸ்திரேலிய அணியானது 1987 ஆம் ஆண்டில் தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.
அதன் பிறகு 1999, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று கோப்பைகளை வென்றது.
மேலும் அது 2015 ஆம் ஆண்டு கோப்பையையும் வென்றுள்ளது.
முன்னதாக 2003 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது.
இந்திய அணி இதனை 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாகவும் இந்தியாவின் விராட் கோலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப் பட்டனர்.