TNPSC Thervupettagam

உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு சீனா முதல் முறையாக தகுதி

October 23 , 2017 2588 days 897 0
  • உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு முதல் முறையாக சீனா தகுதி பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. அதேவேளையில் 1998ஆம் ஆண்டிற்கு பிறகு தென்கொரியா முதல் முறையாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளது.
  • இந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஹாக்கி உலக லீக் அரையிறுதி போட்டியில் 8 ம் இடம்பிடித்த சீனாவுக்கும், 9 ம் இடத்தை பிடித்த தென் கொரியாவிற்கும் உலகக் கோப்பை தொடர் வாய்ப்பை பெறுவதில் போட்டி நீடித்தது.
  • வங்கதேசத்தில் நடைபெற்ற ஹீரோ ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவிற்கு எதிரான போட்டி தென் கொரியாவிற்கு உலகக் கோப்பையில் நுழைய கடைசி வாய்ப்பாக இருந்தது. இருப்பினும் ஆட்டம் சமன் ஆனதால் தென்கொரியா தனது கடைசி வாய்ப்பையும் இழந்தது அதனால் சீனா உலகக் கோப்பையில் பங்கேற்பது உறுதியானது.
  • சர்வதேச ஹாக்கி சம்மேளன விதிகளின்படி, கண்டங்களில் நடைபெரும் தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தானாகத் தகுதி பெரும்.
  • மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவிலுள்ள ஒரிஸா மாநிலத்தில் கலிங்கா மைதானத்தில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 24 முதல் டிசமபர் 16 வரை  நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்