பிரான்சைச் சேர்ந்த உலகச் சமத்துவமின்மை என்ற ஒரு ஆய்வக நிறுவனமானது இந்த அறிக்கையினை வெளியிட்டது.
இந்த நிறுவனத்தின் இணை இயக்குநரான லுகாஸ் சான்செல் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.
புகழ்பெற்ற பிரஞ்சுப் பொருளாதார நிபுணரான தாமஸ் பிகெட்டி என்பவர் இதனை ஒருங்கிணைத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் மொத்த தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவை இந்திய மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே கொண்டு உள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அடித்தட்டிலுள்ள மக்கள் வெறும் 13.1% மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
இந்தியா மேற்கொண்டுள்ளப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் தாராள மயமாக்கல் போன்றவை, பெரும்பாலும் மேல்மட்டத்திலுள்ள 1 சதவீதத்தினருக்கு மட்டுமே பலனளித்துள்ளன என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கை இந்தியாவைப் பணக்கார உயர்தட்டு மக்களைக் கொண்ட ஒரு ஏழை மற்றும் சமத்துவமற்ற நாடாக அடையாளப் படுத்துகிறது.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள 1% என்ற அளவிலான பணக்கார மக்கள் மொத்த தேசிய வருமானத்தில் 22 சதவீதத்தினையும், அதன் முதல் 10 சதவீதத்தினர் 57 சதவீதத்தினையும் கொண்டுள்ளனர்.
வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் வயது வந்தோரின் சராசரி தேசிய வருமானமானது ரூ.2,04,200 ஆகும்.
எனினும், நாட்டின் சராசரி மொத்த தேசிய வருமானமானது, ஏற்றத் தாழ்வுகளை மறைக்கும் வகையில் உள்ளதாக இந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.