TNPSC Thervupettagam

உலகச் சமூக அறிக்கை 2023

January 19 , 2023 704 days 384 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது (UN DESA) 2023 ஆம் ஆண்டிற்கான உலகச் சமூக அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின் கருத்துரு "முதுமை அடைந்து வரும் உலகில் யாரும் விடுபட்டு விடக் கூடாது" என்பதாகும்.
  • இந்த அறிக்கையின்படி, உலகளவில் உள்ள 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களின் எண்ணிக்கையானது அடுத்த 30 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • முதியோர்களின் எண்ணிக்கையானது, உலக மக்கள்தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமான அளவில், 2050 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனை எட்டும்.
  • வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள் ஆகியவை இதில் மிகவும் வேகமான வளர்ச்சியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • மேலும், தற்போது ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் இணைந்து அதிக முதியோர்கள் பங்கைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவில், 2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள முதியோர் எண்ணிக்கை 324 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்