இது மக்களின் நிதி பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1924 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று இத்தாலியின் மிலன் என்ற நகரில் நடைபெற்ற முதல் சர்வதேசச் சேமிப்பு வங்கி மாநாட்டின் போது உலகச் சேமிப்புத் தினம் நிறுவப்பட்டது.
இத்தினத்திற்கான முன்மொழிவானது, இத்தாலியப் பேராசிரியரான பிலிப்போ ரவிசா என்பவரால் முன்மொழியப்பட்டது.