உலக மகளிர் வழிகாட்டிகள் மற்றும் மகளிர் சாரணர்கள் அமைப்பு (WAGGGS) ஆனது உலகச் சிந்தனை தினத்தை அனுசரித்து வருகிறது.
உலகச் சிந்தனை தினத்தில், மகளிர் சாரணர்கள் நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் அமைப்புகள் ஒன்றுக்கொன்று நீடித்தப் பிணைப்பை உருவாக்குவதற்கு ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
இந்தத் தினமானது சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.
1926 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது சர்வதேச மகளிர் சாரணர் மாநாட்டில், உலகச் சிந்தனை தினத்திற்கான அவசியம் குறித்து கருத்தாக்கம் கொண்டு வரப் பட்டது.
"நமது கிரகம், நமது அமைதியான எதிர்காலம்" என்பது 2023 ஆம் ஆண்டிற்கான உலகச் சிந்தனை தினத்தின் கருத்துருவாகும்.