சமீபத்தியக் குரங்கம்மை நோய்த் தொற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொள்ளும் விதமாக உலகச் சுகாதார அமைப்பானது முதல்முறையாக இந்த உலகச் சுகாதார அவசரநிலை செயல் பிரிவை (GHEC) நிறுவியுள்ளது.
இந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்கனவே 15,600 குரங்கம்மை பாதிப்புகள் மற்றும் 537 இறப்புகள் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில், உலகச் சுகாதார அமைப்பானது குரங்கம்மையினைச் சர்வதேச அளவில் கவலை கொள்ள வைக்கக் கூடிய பொதுச் சுகாதார அவசரநிலை (PHEIC) என வகைப்படுத்தியுள்ளது.
கோவிட்-19 பெருந் தொற்றின் போது அடையாளம் காணப்பட்ட சில இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்காக உலக சுகாதார அமைப்பினால் 2023 ஆம் ஆண்டில் GHEC நிறுவப்பட்டது.
அதன் முக்கிய உத்திகள் என்பது பாதிப்புகளைக் கண்டறிதல், பாதிப்புத் தொடர்பின் தடமறிதல், பாதிப்பினைத் தடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி, மருத்துவ மற்றும் வீட்டுப் பராமரிப்பு, தொற்றுத் தடுப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தளவாட ஆதரவு ஆகியவை ஆகும்.