இத்தினமானது பயணம் மற்றும் சுற்றுலாத் துறையின் தகவமைப்பு மற்றும் ஏற்புத் தன்மையை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது பெருந்தொற்றுகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற சவால்களை சமாளிக்கக் கூடிய, தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, கலப்புக் கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலைத் தன்மையை உறுதி செய்யும் ஒரு தகவமைப்பு மிக்க சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
இத்தினத்தின் அனுசரிப்பானது, எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு எதிராக சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் உத்திகளை உருவாக்குவதற்கு உலக நாடுகளை ஊக்குவிக்கிறது.
நீடித்த நிலையான சுற்றுலாவானது வறுமைக் குறைப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது.