சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் மனிதாபிமானப் பணிகள் மற்றும் கொள்கைகளை மதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அனைத்தும் 1859 ஆம் ஆண்டில் சுவிஸ் தொழிலதிபரான ஹென்றி டுனான்ட் இத்தாலியில் நடைபெற்ற சோல்ஃபெரினோ போரின் பயங்கரத்தை எதிர்கொண்டதை அடுத்து தொடங்கியது.
பெரும் உத்வேகம் பெற்ற டுனன்ட்டின் கருத்துக்கள், 1863 ஆம் ஆண்டில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) உருவாவதற்கு வழி வகுத்தது.
1946 ஆம் ஆண்டில், ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளான மே 08 ஆம் தேதியினை செஞ்சிலுவைச் சங்கத்தை கௌரவிக்கும் தினமாகக் கொண்டாடுவதற்கான பெரும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் உலகச் செஞ்சிலுவை தினம் கொண்டாடப் பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "I give with joy, and the joy I give is a reward" என்பதாகும்.