கேப்ஜெமினி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது 2024 ஆம் ஆண்டு உலகச் செல்வ வள அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிக நிகரச் சொத்து மதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை (HNWI) 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 12.2% அதிகரித்துள்ளது.
இது HNWI மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கையை சுமார் 3.589 மில்லியனாக உயர்த்துகிறது.
இந்தியாவின் HNWI நபர்களின் நிதிச் செல்வம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 12.4% அதிகரித்து 1,445.7 பில்லியன் டாலராக இருந்தது என்ற நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 1,286.7 பில்லியன் டாலராக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் சந்தை மிதநிலையானது HNWI நபர்களின் செல்வ வளத்தில் 3.8 டிரில்லியன் டாலர் அதிகரிப்பைத் தூண்டியது.
APAC பகுதியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முறையே HNWI செல்வ வளர்ச்சி 12.4% மற்றும் 7.9%ஆகவும், HNWI நபர்களின் எண்ணிக்கை வளர்ச்சி 12.2% மற்றும் 7.8% ஆகவும் பதிவாகியுள்ளன.
ஆசியா-பசிபிக் பகுதியில் HNWI செல்வ வளர்ச்சியில் 4.2% அதிகரிப்பும், HNWI நபர்களின் எண்ணிக்கையில் 4.8% உயர்வும் பதிவானது.
இந்தியாவின் சந்தை மூலதனம் 2022 ஆம் ஆண்டில் 6% அதிகரித்தது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் 29.0% அதிகரித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவுடன் ஒப்பிட்டுச் சதவீதமாக குறிப்பிடப்படும் நாட்டின் தேசியச் சேமிப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் சுமார் 29.9% ஆக இருந்தது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் 33.4% ஆக அதிகரித்துள்ளது.