இத்தினமானது இதற்கு முன்பு “உலக தொலைத் தொடர்பு” தினமாக அறியப்பட்டது. இது 1865 ஆம் ஆண்டு மே 17 அன்று சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தொடங்கப் பட்டதை நினைவு கூர்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
இது 2005 ஆம் ஆண்டில் துனிசியாவின் தலைநகரான துனிசில் நடைபெற்ற உலகத் தகவல் சமூக மாநாட்டைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒரு தீர்மானத்தினால் ஒரு சர்வதேச தினமாகப் பறை சாட்டப் பட்டது.
இந்த ஆண்டின் கருத்துரு, “2030ஐ இணைத்தல்: வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளுக்கு வேண்டிய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்” என்பதாகும்.