2021 ஆம் ஆண்டிற்கான உலகத் தடகள விருது விழாவில் ஓய்வு பெற்ற இந்திய ஓட்டப் பந்தய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் அவர்களுக்கு ‘ஆண்டின் நாயகி விருதானது‘ வழங்கப் பட்டது.
இவர் 2005 ஆம் ஆண்டு IAAF உலகத் தடகள இறுதிப் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஆவார்.
இவர் 2003 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்சிப் போட்டிகளில் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்தியத் தடகள வீரர் ஆவார்.
ஒலிம்பிக் சாம்பியன்களான ஜமைக்காவின் எலைன் தாம்சன் ஹெராஹ் மற்றும் நார்வேயின் கார்ஸ்டென் வார்ஹோல்ம் ஆகியோர் ஆண்டின் சிறந்த உலகத் தடகள வீரர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.