ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலகத் தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டின் உலகத் தண்ணீர் தினத்தின் கருத்துரு, “எந்தவொரு நபரும் விடுபட்டு விடாமல் இருப்பது” என்பதாகும்.
நீடித்த வளர்ச்சி இலக்கு 6 ஆனது 2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் தண்ணீரின் இருப்பு மற்றும் நீடித்த மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கங்களாக் கொண்டுள்ளது.
1992 ஆம் ஆண்டில் மார்ச் 22 ஆம் தேதியை உலகத் தண்ணீர் தினமாக சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு மீதான ஐக்கிய நாடுகள் கருத்தரங்கின் 21 வது அட்டவணையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உலகத் தண்ணீர் மேம்பாட்டு அறிக்கையானது ஐக்கிய நாடுகளால் வெளியிடப்படுகிறது.
உலகத் தண்ணீர் தினமானது அரசாங்கங்கள் மற்றும் இதர பங்காளர்களுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் நீர் அமைப்பினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் நீர் என்பது அனைத்து நன்னீர் தொடர்பான சவால்களுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பு செயல்முறையாகும்.