தரப்படுத்தலின் முக்கியத்துவத்தைப் பற்றி நுகர்வோர், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குக் கற்பிப்பதே இந்த நாளின் முதன்மையான நோக்கமாகும்.
இத்தினமானது 1946 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இது நாடுகள் மற்றும் அந்நாடுகளின் குடிமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக செயல்படுகிறது.
மேலும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை நோக்கி முன்னேற அவர்களை ஊக்குவிக்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்திற்கான கருத்துரு, "ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட நோக்கம்: நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக நிலையான மேம்பாட்டு இலக்கை ஒருங்கிணைத்தல்."