இது சர்வதேச தர நிர்ணய நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
உலகத் தர நிர்ணய தினத்தின் நோக்கம், உலகப் பொருளாதாரத்திற்குக் தரப்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்து கட்டுப்பாட்டாளர்கள், தொழில்துறை மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
1946 ஆம் ஆண்டில், 25 நாடுகளின் பிரதிநிதிகள் முதன்முதலில் லண்டனில் கூடி, தரநிலையாக்கத்தை எளிதாக்குவதில் கவனம் செலுத்தி ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்க முடிவு செய்த தினமான அக்டோபர் 14 தேதியை நினைவில் கொள்ள அந்த தினம் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
தரப்படுத்துதலுக்கான சர்வதேச அமைப்பு இதற்கு பின்பு ஒரு வருடம் கழித்து உருவாக்கப்பட்டாலும், முதல் உலகத் தர நிர்ணய நாள் 1970களில் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “ஒரு உலகளாவிய நிலையை உருவாக்கும் காணொளித் தரநிலைகள்” என்பதாகும்.