ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகத் தாய்மார்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இத்தினமானது மே 12 அன்று அனுசரிக்கப்பட்டது.
இது உலகம் முழுவதுமுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மரியாதை செலுத்துவதற்காகவும் தாய்மையைக் கௌரவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.
1872 ஆம் ஆண்டில் எழுத்தாளர் ஜுலியா வார்டு ஹாவ் என்பவர் தாய்மார்கள் தினம் குறித்த ஒரு கருத்தை முதன்முதலில் தெரிவித்ததற்காக அறியப்படுகின்றார்.
1908 ஆம் ஆண்டில் அண்ணா ஜார்விஸ் என்பவர், சமூக மற்றும் சுகாதார ஆர்வலரான தனது தாயைக் கௌரவிப்பதற்காக அமெரிக்காவின் தேசிய விடுமுறைக்காக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிறகு 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான உட்ரோ வில்சன் தாய்மார்கள் தினம் குறித்த அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு, மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றைத் தாய்மார்கள் தினமாகத் தேர்ந்தெடுத்தார். இவர் தாய்மார்களைக் கௌரவிப்பதற்காக இத்தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
பின்னாளில் தாய்மார்கள் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவது நடைமுறைக்கு வந்தது.