TNPSC Thervupettagam

உலகத் தீவிரவாதக் குறியீடு 2025

March 13 , 2025 18 days 70 0
  • 2024 ஆம் ஆண்டில் தீவிரவாத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட உலக நாடுகளின் எண்ணிக்கை 58லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டில் தீவிரவாதத்தினால் ஏற்பட்ட அனைத்து உயிரிழப்புகளில் பாதிக்கும் மேலான பெரும் பதிவுகளுடன் சாஹேல் பகுதியானது, உலகளவில் மிகவும் பாதிக்கப் பட்ட பகுதியாக உள்ளது.
  • இந்த ஆண்டு தீவிரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக புர்கினா பாசோ உள்ளது.
  • தீவிரவாதத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் நைஜர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மிகப்பெரிய அதிகரிப்புகள் பதிவாகியுள்ளன.
  • மேற்கு நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் 63% அதிகரித்துள்ளன என்ற நிலையில், ஐரோப்பாவில் தாக்குதல்கள் இரட்டிப்பாகி 67 ஆக உயர்ந்தன.
  • ஏழு மேற்கத்திய நாடுகள், மிகவும் பாதிக்கப்பட்ட முதல் 50 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளன.
  • இஸ்லாமிய அரசு (IS) என்ற அமைப்பானது, அதன் செயல்பாடுகளை 22 நாடுகளுக்கு விரிவுபடுத்தி, உலகின் மிகவும் ஒரு ஆபத்தான அமைப்பாக (சிரியா மற்றும் DRC ஆகிய நாடுகளில் செயலில்) உள்ளது.
  • இக்குறியீட்டில் இந்தியா 14வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்