TNPSC Thervupettagam

உலகத் தீவிரவாதக் குறியீடு

March 27 , 2023 480 days 260 0
  • புதிய உலகத் தீவிரவாதக் குறியீட்டு அறிக்கையில், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
  • இது ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து நான்காவது ஆண்டாக இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்து உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 13வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஒரு சிறிய சரிவைக் கண்டுள்ளது.
  • தெற்காசியாவிலேயே அதிகத் தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகளைக் கொண்ட ஒரு நாடாக ஆப்கானிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
  • தீவிரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 25 நாடுகளில் ஒன்றாகவும், தீவிர வாதத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நாடாகவும் இந்தியாவினைப் பட்டியலிட்டுள்ள நிலையில் இப்பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்