TNPSC Thervupettagam

உலகத் தொழிலாளர் வள நெகிழ்திறன் குறியீடு 2023

February 24 , 2023 510 days 280 0
  • உலக நாடுகளின் அரசாங்க உச்சி மாநாட்டின் போது வொயிட் சீல்டு (White Shield) என்ற அமைப்பானது உலகளாவியத் தொழிலாளர் வள நெகிழ்திறன் குறியீட்டினை வெளியிட்டது.
  • வேலைவாய்ப்பு சார்ந்த ஏற்ற இறக்கங்களைத் தாங்கும் நாடுகளின் திறனையும், அவற்றை எதிர்த்துப் போராடும் திறனையும் இந்தக் குறியீடு அளவிடுகிறது.
  • முதல் வகையான இந்த அறிக்கையானது, தொழில்நுட்பச் சீர்குலைவுகள், பெருந் தொற்றுகள், பசுமைப் பொருளாதாரம் மாற்றம் போன்ற பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் 136 நாடுகளைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, சிங்கப்பூர், சுவீடன் ஆகிய இந்த நாடுகள் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
  • இந்த அறிக்கையில் இந்தியா 65வது இடத்தில் உள்ளது.
  • தெற்காசியாவில் உள்ள மற்ற அனைத்து நாடுகளும் 80 என்ற தரவரிசைக்குக் கீழான இடங்களில் உள்ளன.
  • இந்த அறிக்கையில் பாகிஸ்தான் 97வது இடத்தைப் பிடித்தது.
  • இந்தத் தரவரிசையில் இடம் பெற்ற மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகள் (136 நாடுகளில் 49 நாடுகள்) தொழிலாளர் வளச் சந்தை நெகிழ்திறனில் 100க்கு 50க்கும் குறைவான மதிப்பெண்களையேப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்