சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமானது சில முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து உலகத் தொழில்துறை கார்பன் நீக்கக் கூட்டணியினைத் தொடங்கி உள்ளது.
இது நிகர சுழிய அளவில் இலட்சிய இலக்குகளை விரைவுபடுத்தச் செய்வதையும், தொழில்துறை மதிப்புச் சங்கிலிகளில் கார்பன் நீக்கம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கார்பன் நீக்கம் என்ற சொல்லுக்கு கார்பன் குறைப்பு என்று பொருளாகும்.
இந்தக் கூட்டணியானது பேசசுவார்த்தை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு வழி வகை செய்யும்.
இதன் முதல் கூட்டமானது எகிப்தில் உள்ள ஷர்ம் எல் ஷேக்கில் 27வது பங்குதாரர் மாநாட்டில் நடைபெறும்.
IRENA என்பது ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அறிவை மேம்படுத்துவதற்கும், புதுப்பிக்கத் தக்க ஆற்றலை ஏற்றுக் கொள்வதற்கும் அதன் நிலையான பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் வலியுறுத்தப்பட்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.