உலகத் தொழுநோய் தினமானது ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப்படுகின்றது. இது தொழுநோய் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க முற்படுவதுடன், குழந்தைகளில் தொழுநோய் தொடர்பான குறைபாடுகளற்ற இலக்கின் மீது கவனம் செலுத்துகின்றது.
இந்தியாவில் இத்தினமானது மகாத்மா காந்தியின் இறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் வாழ்நாள் முழுவதும் இரக்கம் கொண்டிருந்த காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தத் தினமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “தொழுநோய்களின் களங்கத்தை மாற்றுதல்” என்பதாகும்.
தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இது உடலில் உள்ள கைகள், கால்கள் மற்றும் தோல் பகுதிகளில் கடுமையான, சிதைக்கும் தன்மையுள்ள தோல் புண்கள் மற்றும் நரம்பு ஆகியவற்றில் சேதத்தை ஏற்படுத்துகின்றது.