உலக வானிலையியல் மாநாட்டு அமைப்பானது, ஒரு புதியப் பசுமை இல்ல வாயு (GHG) கண்காணிப்பு முன்னெடுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு (G3W) என்பது உலக வானிலையியல் அமைப்பு (WMO) மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
UNFCCC அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிறப் பங்குதாரர் நாடுகளுக்கான விதி முறைகளை ஆதரிப்பதற்காக பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் (உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை) சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கண்காணிப்பை நிறுவுவதை G3W நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய உலகளாவிய GHG கண்காணிப்பு அமைப்பானது, முக்கியமான தகவல் பரவலில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதோடு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்பை வழங்கும்.
இந்த அமைப்பானது, 100க்கு 100 கிமீ என்ற ஒரு தெளிவுத் திறனில், வளிமண்டலத்தில் மற்றும் அதற்கு வெளியே உள்ள சில நிகர GHG உமிழ்வுகளின் மாதாந்திர உலகளாவிய மதிப்பீடுகளை நிலையான முறையில் வழங்கும்.