TNPSC Thervupettagam

உலகப் பட்டினி நிலைக் குறியீடு (GHI) 2023

October 16 , 2023 405 days 1039 0
  • 2023 ஆம் ஆண்டின் உலகப் பட்டினி நிலைக் குறியீட்டில் (GHI) மதிப்பிடப்பட்ட மொத்தம் 125 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 111 வது இடத்தில் உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தைப் பெற்று இருந்தது.
  • உலகப் பட்டினி நிலைக் குறியீட்டில் ஆப்கானிஸ்தான், ஹைத்தி மற்றும் 12 துணை-சஹாரா பகுதி நாடுகள் ஆகியவை மட்டுமே இந்தியாவை விட மோசமான செயல் திறன் கொண்டதாக உள்ளன.
  • 0 என்பதை சிறந்த செயல் திறனுக்கான மதிப்பெண் ஆகவும் (பட்டினி நிலை இல்லை) மற்றும் 100 என்பதை மோசமான செயல் திறனுக்கான மதிப்பெண் ஆகவும் கொண்ட உலகப் பட்டினி நிலைக் குறியீட்டின் 100-மதிப்பெண் அளவீட்டில் இந்தியாவின் தர வரிசையானது 28.7 என்ற மதிப்பெண் நிலையில் அமைந்துள்ளது.
  • உலகத்திற்கான 2023 ஆம் ஆண்டு உலகப் பட்டினி நிலைக் குறியீட்டு மதிப்பெண் 18.3 ஆகும் என்ற நிலையில் இது மிதமான செயல்திறன் ஆகக் கருதப்படுகிறது.
  • இருப்பினும், இது உலகின் 2015 ஆம் ஆண்டு உலகப் பட்டினி நிலைக் குறியீட்டு மதிப்பெண்ணான 19.1 என்பதை விட ஒரு மதிப்பெண் குறைவாக உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டில் 38.4 ஆக இருந்த இந்தியாவின் மதிப்பெண் ஆனது 2008 ஆம் ஆண்டில் 35.5 ஆகவும் 2015 ஆம் ஆண்டில் 29.2 ஆகவும் மேம்பட்டதையடுத்து, 2000 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தக் குறியீட்டில் இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களை அடைந்தது.
  • கடந்த எட்டு ஆண்டுகளில், உலகப் பட்டினி நிலைக் குறியீட்டில் இந்தியா 0.5 புள்ளிகள் மட்டுமே முன்னேறியுள்ளது.
  • தெற்காசியா மற்றும் சஹாராவின் தெற்கே அமைந்த ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை அதிகப் பட்டினி நிலையைக் (கடுமையான பட்டினி நிலை) கொண்டவையாகும்.
  • மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவை மூன்றாவது அதிகப் பட்டினி நிலையைக் கொண்ட ("மிதமான அளவிலான" பட்டினி நிலை) பகுதிகளாகும்.
  • இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 16.6 சதவீதமாகவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகவும் உள்ளது.
  • 15 மற்றும் 24 வயதிற்குட்பட்ட பெண்களில் இரத்த சோகை பாதிப்பு 58.1 சதவீதமாக உள்ளது.
  • கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பினைக் கொண்டுள்ளதால் 18.7 சதவீதத்துடன் உலகிலேயே அதிக குழந்தை நலிவுறுதல் விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
  • இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (102வது), வங்காளதேசம் (81வது), நேபாளம் (69வது), இலங்கை (60வது) ஆகியவை இந்தக் குறியீட்டில் அதை விட அதிக சிறப்பானச் செயல்திறன் கொண்டதாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்