இது 'கன்சர்ன் வேர்ல்டுவைட்' மற்றும் 'வெல்த்ஹங்கர்ஹைல்ஃப்' ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான 19வது உலகப் பட்டினிக் குறியீடு (GHI) அறிக்கையில் மதிப்பிடப் பட்ட 127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது இந்தியாவை 'தீவிர' பட்டினி நிலைப் பிரச்சனைகள் உள்ள நாடுகளுள் ஒன்றாக வகைப்படுத்துகிறது.
இந்தியா அதன் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் வங்காள தேசத்தை விட பின்தங்கியுள்ளது, அதே நேரத்தில் இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விட சற்று மேல் நிலையில் உள்ளது.
முறைமை மற்றும் திருத்தப்பட்ட தரவுகளின் மாற்றம் காரணமாக 2024 ஆம் ஆண்டு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு அறிக்கையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது.
இருப்பினும், இது 2000, 2008, 2016 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான ஒப்பீட்டுத் தரவை வழங்குகிறது.
உலக அளவில் அதிக குழந்தை வளர்ச்சி குறைபாடு விகிதத்துடன் (18.7%) குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இந்தியா தொடர்ந்து கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
இந்தியாவில் குழந்தை வளர்ச்சியின்மை விகிதம் 35.5% ஆகவும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயரிழப்பு விகிதம் 2.9% ஆகவும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7% ஆகவும் உள்ளது.
உலகளவில், போதிய அளவு உணவு கிடைக்காததால் ஒவ்வொரு நாளும் சுமார் 733 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.
மேலும், சுமார் 2.8 பில்லியன் மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலை உள்ளது.
தெற்கு சூடான், புருண்டி, சோமாலியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலின் கடைசி இடங்களில் இடம் பெற்றுள்ள மூன்று நாடுகளாகும்.