ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு) ஆனது சமீபத்தில் வருடாந்திர உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 161 ஆம் இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசையானது 2024 ஆம் ஆண்டில் 159 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் இந்தியாவை விட ஏழு இடங்கள் முன்னணியில் 152வது இடத்தில் உள்ளது.
ஆனால், உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் மதிப்பெண் கடந்த ஆண்டில் இருந்த 36.62 என்ற மதிப்பில் இருந்து 31.28 ஆகக் குறைந்துள்ளது.
நார்வே மற்றும் டென்மார்க் ஆகியவை RSF பட்டியலில் முதலிடத்தினைப் பெற்றுள்ளன என்ற நிலையில் எரித்திரியா இதில் கடைசி இடத்திலும், அதற்கு முந்தைய இடத்தில் சிரியாவும் இடம் பெற்றுள்ளன.