TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம் – மே 03

May 4 , 2022 845 days 314 0
  • பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவை அடிப்படை மனித உரிமைகள் என்பதை அறிவிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • பணியாற்றும் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்த அல்லது தங்கள் உயிரை இழந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "டிஜிட்டல் முறை சூழ்ந்த உலகில் பத்திரிகையியல்" என்பதாகும்.
  • யுனெஸ்கோ அமைப்பானது, 1993 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதியன்று  விண்ட்ஹோக் என்ற பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • அது தடையற்ற, சுதந்திரமான மற்றும் பன்மைத்துவப் பத்திரிகை அமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்