எல்லைகளைக் கடந்த நிருபர்கள் எனும் அமைப்பானது, 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
இது 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பத்திரிகைகளின் நிலைமையை மதிப்பிடுகிறது.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 157வது இடத்தில் உள்ள நிலையில் இந்தியா 150வது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது.
மூன்று நார்டிக் நாடுகளான நார்வே முதல் இடத்தையும், அதைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முன்னணியில் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம், பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் கீழ் நிலையில் உள்ள முதல் 10 நாடுகளுள் சீனா, வட கொரியா, ஈரான், கியூபா மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் அடங்கும்.