ஐக்கிய நாடுகள் சபையானது 2025 ஆம் ஆண்டினை சர்வதேச பனிப்பாறைகள் வளங் காப்பு ஆண்டாகவும், மார்ச் 21 ஆம் தேதியினை முதலாவது உலகப் பனிப்பாறைகள் தினமாகவும் அறிவித்துள்ளது.
பருவநிலை மாற்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பனிப்பாறைகளின் மிக முக்கியப் பங்கையும் அவற்றின் வளங்காப்பிற்கான மொத்த அவசரத் தேவையையும் எடுத்துக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மற்றும் பைரனீஸ் மலைகள் 2000 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அவற்றின் பனிப்பாறை அளவின் 40 சதவீதத்தை இழந்துள்ளன.
வருங்கால பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்படும் வெள்ள நீர் ஆனது அதன் ஓட்டப் பாதையில் வசிக்கும் சுமார் 35,000 மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.