பசுமை இல்ல வாயு அளவுகள், மேற்பரப்பு வெப்பநிலை, கடல் வெப்பம் மற்றும் அமில மயமாக்கல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை 2023 ஆம் ஆண்டில் ஒரு அதிகபட்ச அளவை எட்டியுள்ளன.
உலக வானிலை அமைப்பின் (WMO) “உலகப் பருவநிலை 2023” என்ற தலைப்பிலான புதிய அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
174 ஆண்டு காலக் கண்காணிப்புப் பதிவில் 2023 ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் பதிவான சராசரி மேற்பரப்பு அருகுநிலை வெப்பநிலையானது தொழில் துறைக்கு முந்தைய அடிப்படை வெப்பநிலை மதிப்பினை விட (1850-1900) 1.45 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் CO2 செறிவு தொடர்ந்து உயர்ந்தது, அதே சமயம் உலகளாவியச் சராசரி கடல் மட்டம் அதிகபட்ச அளவை எட்டியது.
கடந்த 10 ஆண்டுகளில் (2014-2023) பதிவான கடல் மட்ட உயர்வு விகிதம் ஆனது, முதல் பத்தாண்டு காலச் செயற்கைக்கோள் தரவுப் பதிவை (1993 - 2002) விட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
2022-2023 என்ற நீரியல் ஆண்டிற்கான (1950-2023) மதிப்பீட்டுக் குறிப்பிற்கான உலகளாவியப் பனிப்பாறைகளில் மிகப்பெரிய பனி இழப்புகள் பதிவாகியுள்ளன.