TNPSC Thervupettagam

உலகப் பருவநிலை நிதியளிப்பு நிலை அறிக்கை 2023

November 17 , 2023 374 days 215 0
  • 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பருவநிலை நிதியின் சராசரி வருடாந்திர வரவானது 1.3 டிரில்லியன் டாலர் ஆக உள்ள நிலையில் இது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 653 பில்லியன் டாலர்களாக இருந்தது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கான நிதியளிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதோடு மொத்தத் தணிப்பு நிதியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 44 சதவீதத்தினையும், போக்குவரத்து 29 சதவீதத்தினையும் கொண்டுள்ளது.
  • அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தூய எரிசக்திக்கான 90 சதவீத நிதியைப் பெற்றுள்ளன.
  • ஏற்பு நிதியளிப்பானது, இதுவரை இல்லாத அளவிற்கு 63 பில்லியன் டாலர்களை எட்டி உள்ளது.
  • ஆனால் இது 2030 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்து வரும் நாடுகளுக்காக ஆண்டிற்கு 212 பில்லியன் டாலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை.
  • கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக், அமெரிக்கா மற்றும் கனடா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகள் மொத்த பருவநிலை நிதியில் மொத்தம் 84 சதவீதத்தைக் கொண்டு உள்ளன.
  • வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்ற நிலையில் மொத்தம் 30 பில்லியன் டாலர்களில் 3 சதவீதத்திற்கும் குறைவான நிதியானது குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அல்லது நாடுகளுக்குள் வழங்கப்பட்டது.
  • 2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகள் வெறும் 23 பில்லியன் டாலர் நிதியினைப் பெற்ற நிலையில் இது மொத்தப் பருவநிலை நிதியில் 2 சதவீதத்திற்கும் குறைவானது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்