குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற, SEWA அமைப்பின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார்.
இந்த நிகழ்வின் போது, பருவநிலை மாற்றத்தினை எதிர்த்துப் போராடச் செய்வதில் பெண்களுக்காக 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு உலகப் பருவநிலை நெகிழ்திறன் நிதியை வழங்குவதாக அறிவித்தார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், புதிய வாழ்வாதார வளங்கள் மற்றும் கல்வியை வழங்குவதற்கும் வேண்டி பெண்களுக்கும் சமூகங்களுக்கும் இந்த நிதி ஆதரவு அளிக்கும்.
SEWA என்பது சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கம் என்பதைக் குறிக்கிறது.
இது சமீபத்தில் மறைந்த ஆர்வலர் ஈலா பட் அவர்களால் 1972 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.