TNPSC Thervupettagam

உலகப் பறவைகளின் நிலை

May 11 , 2022 803 days 381 0
  • உலகப் பறவைகளின் நிலை என்பது சுற்றுச்சூழல் வளங்களின் மீதான ஒரு வருடாந்திர மதிப்பாய்வு ஆகும்.
  • இது BirdLife International என்ற நிறுவனத்தின் புகழ்வாய்ந்த ஒரு அறிவியல் பதிப்பாகும்.
  • ‘உலகப் பறவைகளின் நிலை’ என்ற ஓர் புதிய மதிப்பாய்வின்படி, உலகளவில் தற்போதுள்ள பறவை இனங்களில் தோராயமாக 48% இனங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது அல்லது கருதப்படுகிறது.
  • கண்டறியப்பட்ட 10,994 பறவை இனங்களில் ஏறக்குறையப் பாதி இனங்கள் இயற்கை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் விரிவடைந்து வரும் மனிதத் தாக்கம் காரணமாக இந்த அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
  • 146 இனங்கள் மீதான சமீபத்திய வருடாந்திரப் போக்குகள் கணக்கிடப்பட்ட நிலையில் இந்தியாவில் பறவைகளின் பன்முகத்தன்மை குறைந்து வரும் போக்கு மிக ஆபத்தான ஒன்றாக உள்ளது.
  • இவற்றுள், கிட்டத்தட்ட 80% அளவிலான பறவை இனங்கள் எண்ணிக்கையில் குறைந்து வருவதோடு, கிட்டத்தட்ட 50% அளவிலான பறவை இனங்கள்  வலுவான சரிவினைக் கண்டுள்ளன.
  • ஆய்வு செய்யப்பட்ட உயிரினங்களில் 6 சதவீதத்திற்கும் மேலானவை நிலையான எண்ணிக்கையைக் கொண்டுள்ளதோடு, மேலும், 14% இனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்குகளைக் கொண்டுள்ளன.
  • உலகில் எஞ்சியிருக்கும் பறவை இனங்களில் 14 சதவீதத்தினை மனிதர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்