TNPSC Thervupettagam

உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2021

September 7 , 2020 1540 days 766 0
  • டைம்ஸ் உயர் கல்வி நிறுவனமானது உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை, 2021 என்பதின் முடிவுகளை அறிவித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டுத் தரவரிசையில், இந்தியாவானது 2021 ஆம் ஆண்டின் டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் தகுதி பெறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்துள்ளது.
  • எனினும், இதில் எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகமும் முதல் 300 இடங்களுக்குள் இடம் பெறவில்லை.
  • ஏறத்தாழ இந்தியாவிலிருந்து 63 பல்கலைக்கழகங்கள் இந்தத் தரவரிசைக்குத் தகுதி பெற்றுள்ளன.
  • பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஒட்டுமொத்த உலகத் தரவரிசையில் 301-350 என்ற பிரிவில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • ஐஐடி-ரோப்பர் மற்றும் ஐஐடி-இந்தூர் ஆகியவை இந்தத் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
  • பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் ஆகியவை 801-1000 பிரிவுகளில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டுத் தரவரிசையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் மேலும் 14 பல்கலைக்கழகங்கள் தரவரிசைக்குத் தகுதி பெற்றுள்ளன.
  • தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டினாலும் அடைய முடியாத உயர்வு இதுவாகும்.
  • இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்திலும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • அமெரிக்காவானது முதல் 200 இடங்களில் 59 கல்வி நிறுவனங்களைப் பதிவு செய்துள்ளது.
  • இதற்கு அடுத்து ஐக்கிய இராஜ்ஜியம் 29 கல்வி நிறுவனங்களையும் ஜெர்மனி 21 கல்வி நிறுவனங்களையும் பதிவு செய்துள்ளன.
  • சீனாவின் ஷின்ஹா பல்கலைக்கழகமானது முதல் 20 இடத்தில் இடம் பெற்ற முதலாவது ஆசியப் பல்கலைக்கழகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்