டைம்ஸ் உயர் கல்வி நிறுவனமானது உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை, 2021 என்பதின் முடிவுகளை அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுத் தரவரிசையில், இந்தியாவானது 2021 ஆம் ஆண்டின் டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் தகுதி பெறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்துள்ளது.
எனினும், இதில் எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகமும் முதல் 300 இடங்களுக்குள் இடம் பெறவில்லை.
ஏறத்தாழ இந்தியாவிலிருந்து 63 பல்கலைக்கழகங்கள் இந்தத் தரவரிசைக்குத் தகுதி பெற்றுள்ளன.
பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஒட்டுமொத்த உலகத் தரவரிசையில் 301-350 என்ற பிரிவில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
ஐஐடி-ரோப்பர் மற்றும் ஐஐடி-இந்தூர் ஆகியவை இந்தத் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் ஆகியவை 801-1000 பிரிவுகளில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டுத் தரவரிசையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் மேலும் 14 பல்கலைக்கழகங்கள் தரவரிசைக்குத் தகுதி பெற்றுள்ளன.
தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டினாலும் அடைய முடியாத உயர்வு இதுவாகும்.
இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்திலும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவானது முதல் 200 இடங்களில் 59 கல்வி நிறுவனங்களைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு அடுத்து ஐக்கிய இராஜ்ஜியம் 29 கல்வி நிறுவனங்களையும் ஜெர்மனி 21 கல்வி நிறுவனங்களையும் பதிவு செய்துள்ளன.
சீனாவின் ஷின்ஹா பல்கலைக்கழகமானது முதல் 20 இடத்தில் இடம் பெற்ற முதலாவது ஆசியப் பல்கலைக்கழகமாகும்.