கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்தின் (GEF) 7வது கூட்டத்தின் போது உலகப் பல்லுயிர்க் கட்டமைப்பு நிதியத்திற்கு (GBFF) அங்கீகாரம் வழங்கப் பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தக் கட்டமைப்பானது 2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர்ப் பெருக்க இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், இயற்கையை அதன் மீள்வுப் பாதையில் நிலை நிறுத்துவதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள், உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கை (CBD) மூலம் நிறுவப்பட்ட குன்மிங்-மாண்ட்ரீயல் உலகப் பல்லுயிர்க் கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை இந்த நிதியம் வழங்குகிறது.