ஏப்ரல் 18 ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “கிராமப்புற இயற்கை நிலம்” என்பதாகும்.
“கிராமப்புற இயற்கை நிலம்” என்ற கருத்துருவானது, “கிராமப்புற பாரம்பரியம் மீதான அறிவியல்சார் கருத்தரங்கு” என்ற கருத்துருவுடன் தொடர்புடையதாகும்.
உலகப் பாரம்பரிய தினமானது சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள் ஆணையத்தினால் 1982 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டு யுனெஸ்கோவின் பொதுச் சபையினால் 1983 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்தினமானது கலாச்சாரப் பாரம்பரியத்தின் பன்மைத்துவம் குறித்தும் அதைப் பாதுகாப்பதற்குத் தேவையான முயற்சிகள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
ICOMOS (International Council on Monuments and Sites) ஆனது “நீலக் கவசம்” என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் பங்காளராகும். இது போர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட உலகின் கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்குப் பணியாற்றுகின்றது.
ICOMOS ஆனது 1965 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையிடம் பாரீஸ் ஆகும்.