உலகப் பாரம்பரிய வாரம் - நவம்பர் 19 முதல் 25 வரை
November 27 , 2022
636 days
239
- உலகப் பாரம்பரிய வாரமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
- இது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பாதுகாப்பை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உலகப் பாரம்பரிய வாரமானது இந்தியத் தொல்லியல் துறையினால் கொண்டாடப் படுகிறது.
- இந்தியத் தொல்லியல் துறையால் 3,691 நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப் படுகின்றன.
- உத்தரப் பிரதேச மாநிலத்தில், அதிக எண்ணிக்கையிலான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளது.
- இவற்றில் சுமார் 40 நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
- உலகிலேயே அதிகளவில் பாரம்பரியத் தளங்களைக் கொண்ட ஆறாவது நாடு இந்தியாவாகும்.
Post Views:
239