உலகப் பாரம்பரியத் தினம் - ஏப்ரல் 18
April 21 , 2024
218 days
175
- சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் ஆனது, உலகப் பாரம்பரியத் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்தத் தினம் ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (UNESCO) 1983 ஆம் ஆண்டில் முதன்முதலில் கொண்டாடப் பட்டது.
- புவியின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பன்முகத் தன்மை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Disasters & Conflicts Through the Lens of the Venice Charter" என்பதாகும்.
- இந்தியாவில் மொத்தம் 3691 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் உள்ளன.
- இவற்றில் 40 தளங்கள் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
Post Views:
175