2022-2023 ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரியத் தளங்களாகப் பரிசீலிப்பதற்காக இந்தியாவின் பரிந்துரையாக கர்நாடகாவில் உள்ள பேலூர், ஹலபேடு மற்றும் சோமநாதபுரத்தின் ஹொய்சாலா கோவில்கள் ஆகியவை இறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த மூன்று ஹொய்சாலா கோயில்களும் இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னங்களாகும்.
ஹொய்சாலா கோவில்கள் இந்தத் தகுதிநிலையினை அடைந்தால், இந்த நினைவுச் சின்னங்கள் மாநிலத்தின் உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும்.
இப்பட்டியலில் இடம் பெற்ற மற்ற மூன்று தளங்கள்
விஜயநகரத்தின் ஹம்பி நினைவுச் சின்னங்கள்
சாளுக்கியர் காலத்தினைச் சேர்ந்த பட்டாடக்கல் கோயில் வளாகம் மற்றும்
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
உலகப் பாரம்பரியத் தளம் என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு தேவைப்படுகின்ற, இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி அல்லது இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.