பட்டினி நிலை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான இரண்டாவது உலகப் பாராளுமன்ற உச்சி மாநாடானது சிலியில் நடைபெற்றது.
இந்த உச்சி மாநாட்டில் 64 நாடுகளைச் சேர்ந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகப் பாராளுமன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
உணவு முறையினை நிலைத்தன்மை மிக்கதாகவும், அனைத்து மக்களுக்கும் அணுகக் கூடியதாகவும் மாற்றுவதற்காக வேளாண் உணவு முறையில் சீர்திருத்தங்களை மேற் கொள்வதற்கு அழுத்தம் கொடுக்க அனைத்து நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
வேளாண்மை உணவு அமைப்பில் வறுமை, பட்டினி நிலை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் புதிய ஒரு பலதரப்பு அமைப்பினை அவை உருவாக்கியுள்ளன.
2020 ஆம் ஆண்டில் பதிவான அளவை விட 2021 ஆம் ஆண்டில் 46 மில்லியன் மக்கள் பட்டினி நிலையால் வாடினர்.
2021 ஆம் ஆண்டில் உலகில் சுமார் 2.3 பில்லியன் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை.
2018 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் பட்டினி நிலை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த முதல் உச்சி மாநாடானதும் நடத்தப் பட்டது.