உலக சுகாதார அமைப்பானது, உலகப் புகையிலைப் பெருந்தொற்று, 2023: புகையிலைப் புகையிலிருந்து மக்களை நன்குப் பாதுகாத்தல் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு ள்ளது.
2007 ஆம் ஆண்டில் 22.8 சதவீதமாக இருந்த புகை பிடிப்பவர்களின் உலகளாவிய விகிதம் 2021 ஆம் ஆண்டில் 17 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நெதர்லாந்து, மொரிஷியஸ், பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மட்டுமே உலகளவில் புகையிலைப் புகைப்பதைக் குறைப்பதற்காக என்று பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்துகின்றன.
புவியில் உள்ள 10 பேரில் ஏழுக்கும் அதிகமானோர் (5.6 பில்லியன்) தற்போது புகையிலைப் புகையினால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்படுகிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் 8.7 மில்லியன் மக்கள் புகையிலை தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.
44 நாடுகளில் உள்ள 2.3 பில்லியன் மக்கள் உலக சுகாதார அமைப்பின் புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் படாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
74 நாடுகளில் அத்தகைய தயாரிப்புகளின் பயன்பாட்டினைத் தடுப்பதற்கான விதி முறைகள் அதாவது பொது இடங்களில் புகையிலையினைப் பயன்படுத்தத் தடை, அறிவிப்புப் பலகைகள் வைத்தல் மற்றும் விளம்பரங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லை.