உலகப் புதைபடிவ எரிபொருள்கள் பதிவேடு என்பது புதைபடிவ எரிபொருள்களின் இருப்பு, உற்பத்தி மற்றும் உமிழ்வு பற்றிய உலகின் முதல் பொது தரவுத் தளமாகும்.
உலகப் புதைபடிவ எரிபொருள்கள் பதிவேடு என்பது உலகெங்கிலும் உள்ள புதைபடிவ எரிபொருட்களைக் கண்காணிக்கும் "முதல் முழுமையான வெளிப்படையான" பொது தரவுத் தளமாகும்.
இது கார்பன் கண்காணிப்பு மற்றும் உலக ஆற்றல் கண்காணிப்பு அமைப்பு ஆகிய அமைப்புகளால் தொடங்கப்பட்டது.
செப்டம்பர் 13 ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் தொடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மாநாடு மற்றும் COP27 ஆகிய இரண்டு முக்கியமான சர்வதேச பருவநிலைப் பேச்சுவார்த்தைகளுடன் ஒத்துப் போகும் வகையில் இது வெளியிடப் பட்டது.
இது நவம்பர் மாதம் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
89 நாடுகளில் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தளங்களின் தரவுகள் இந்த பதிவேடுகளில் இடம் பெற்றுள்ளன.