வாசித்தல், எழுதுதல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றின் மீதான ஆர்வத்தினை ஊக்குவிக்கச் செய்யும்ம் வகையில் இந்தத் தினம் உலக அளவில் அனுசரிக்கப் படுகிறது.
இது உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமைத் தினம் அல்லது சர்வதேசப் புத்தக தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதியன்று முதலாவது உலகப் புத்தகத் தினக் கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்தது.
வில்லியம் ஷேக்ஸ்பியர், கார்சிலாசோ டி லா வேகா மற்றும் மிகுவல் டி செர்வாண்டஸ் உட்பட பல சிறந்த எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் மறைவு நாள் ஆண்டு நிறைவானது இந்த நாளில் அனுசரிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'சுதேச (உள்நாட்டு) மொழிகள்' என்பது ஆகும்.