TNPSC Thervupettagam

உலகப் புத்தகக் கண்காட்சி - புது தில்லி

January 7 , 2020 1664 days 661 0
  • புது தில்லி உலகப் புத்தகக் கண்காட்சியானது இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து தேசியப் புத்தக அறக்கட்டளையினால் (National Book Trust - NBT)  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த கண்காட்சியானது தெற்காசியாவின் அறிவுசார் உலகிற்கு ஒரு நுழைவாயிலாகவும் செயல்படுகின்றது.
  • இந்தக் கண்காட்சியின் கருப்பொருள் “காந்தி, எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்பதாகும்.
  • 12,000க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களுடன் ஆங்கில வெளியீடுகளுக்கான மூன்றாவது பெரியச் சந்தையாக இந்தியா இருப்பதால் இந்தியச் சந்தைக்கு இந்த கண்காட்சி முக்கியமானதாக விளங்குகின்றது.

தேசியப் புத்தக அறக்கட்டளை

  • 1957 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியப் புத்தக வெளியீட்டு நிறுவனமானது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்