TNPSC Thervupettagam

உலகப் புத்தாக்கக் குறியீடு 2023

October 2 , 2023 419 days 604 0
  • சமீபத்திய 2023 ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீட்டில் இந்தியா தனது 40வது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
  • இது உலக அறிவுசார் சொத்து அமைப்பினால் (WIPO) வெளியிடப் படுகிறது.
  • 132 உலக நாடுகளின் புத்தாக்கச் சூழல் அமைப்பின் செயல்திறன் மற்றும் உலக நாடுகளின் சமீபத்தியப் புத்தாக்கப் போக்குகளை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
  • 2015 ஆம் ஆண்டில், 81வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த எட்டு ஆண்டுகளாக தனது நிலையில் முன்னேறி வருகிறது.
  • சுவிட்சர்லாந்து 13வது ஆண்டாக இந்தக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது.
  • தற்போது சுவீடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு (4வது) மற்றும் சிங்கப்பூர் (5வது) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்