உலகப் புற்றுநோய் தினமானது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 04 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
கல்வி, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகப் புற்றுநோய் தினத்திற்கான அதிகாரப்பூர்வ நிறங்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு ஆகும்.
முதலாவது புற்றுநோய் தினமானது 1933 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கொண்டாடப் பட்டது.
இது உலக சுகாதார நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கான இந்தத் தினத்தின் கருத்துரு - 2022, 2023 மற்றும் 2024 - "சிகிச்சை நலனில் உள்ள இடைவெளியை நிரப்புதல்" என்பதாகும்.