ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12 ஆம் தேதியன்று உலகப் புலம்பெயர் தமிழர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
இந்த ஆண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 58 இளைஞர்கள் ‘நமது பூர்வீக இடத்தினை அடைதல்’ என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா மேற்கொண்டது சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 13 பேருக்கு முதல்வர் அவர்களே விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசானது முன்னதாக, புலம்பெயர்ந்த (வெளிநாடு வாழ்) தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையினை உருவாக்கியது.
வெளிநாடுகளில் உள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு சட்ட நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது இலவச சட்ட உதவிகளை வழங்கி வருவதோடு, உடல் நலக் குறைபாடுகள் அல்லது மோதல்கள் அல்லது போர் சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைத் தாயகம் திரும்பச் செய்வதற்கும் உதவுகிறது.