TNPSC Thervupettagam

உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு (GOOS) அறிக்கை

October 5 , 2022 654 days 422 0
  • இது நமது உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பின் (GOOS) நிலை, திறன் மற்றும் மதிப்பு பற்றிய ஒரு ஆழ்ந்த ஆய்வறிக்கையினை வழங்குகிறது.
  • உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு என்பது பெருங்கடல் கண்காணிப்புத் தேவைகளை வரையறுக்கச் செய்யவும், கண்காணிப்பு வலையமைப்புகளை ஒருங்கிணைக்கவும், தரவு மற்றும் முன்னறிவிப்புகளின் பரிமாற்றங்களை உறுதிப் படுத்தவும் உதவும் ஆறு முக்கியக் கூறுகளைக் கொண்ட ஒரு கூட்டுத் தளமாகும்.
  • உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு என்பது அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தின் (IOC) தலைமையிலான ஒரு திட்டமாகும்.
  • அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையமானது யுனெஸ்கோ அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • இந்த அறிக்கையின்படி, உலகப் பெருங்கடல்களில் உள்ள கார்பன் செறிவைக் கண்காணிப்பதற்கான அமைப்பானது, கடல்சார் கார்பன் பற்றிய தகவல்களுக்கான வளர்ந்து வரும் மற்றும் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய மிகவும் போதுமானதாக இல்லை.
  • மனித நடவடிக்கைகளால் ஆண்டுதோறும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் 40 ஜிகா டன் கார்பனில் 26 சதவீதம் பெருங்கடல்களால் உறிஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்